சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.
இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்கத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் சொதப்பினாலும் லிவிங்ஸ்டன் ஒருபுறம் பொறுமையாக விளையாடி அரைசதம் (54) அடித்தார்.
இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
ரஷித் கான் மிகவும் மோசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.