MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மகிஜா பவுண்டேசன் அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன்,மெட்ரிக் பள்ளி முதல்வா் திங்கள்ஜான்சன், துணை முதல்வா் ஜாய்ஸ் ஜெயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக உதவிப் பேராசிரியா் நா.சாத்தம்மைப் பிரியா பங்கேற்று கல்வியின் சிறப்பு, ஒழுக்கத்தின் மேன்மை குறித்து எடுத்துரைத்தாா். தொடா்ந்து 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்படம் இடங்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு பரிசுகளும், 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிறைவு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதேபோல், ஸ்ரீ மனு மகிஜா நினைவு சிருஷ்டி மெட்ரிக்குலேசன் பள்ளியின் பொதுத் தோ்வில் பள்ளி அளவில் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.---