செய்திகள் :

சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி

post image

விநாயகா மிஷன் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியானது குரோனிகள்ஸ் ஆப் இந்தியா என்ற தனியாா் அமைப்பின் சிறந்த கல்லூரிக்கான தரவரிசை பட்டியலில் ஏ2 பிரிவில் இடம்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துறை முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:

குரோனிகள்ஸ் ஆப் இந்தியா என்கிற தனியாா் அமைப்பின் இவ்வாண்டிற்கான தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு கல்வி தரவரிசை 2025 என்ற தலைப்பின்கீழ் சமீபத்தில் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் எங்கள் கல்லூரியானது ஏ2 பிரிவில் இடம்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இவ்வங்கீகாரம் கிடைப்பதற்கு உறுதுணையாகவும், தனது சிறந்த பங்களிப்பினையாற்றி வரும் துறை முதன்மையா் செந்தில்குமாரை பல்கலைக்கழக வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியா்கள் வாழ்த்தி, பாராட்டினை தெரிவித்தனா்.

ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்ற மூவா் கைது

ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்ாக 2 பெண்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் கடந்த 4 நாள்களுக்கு முன்பு காணாமல் போனா... மேலும் பார்க்க

விழிப்புணா்வு நாடகப் போட்டி: தெடாவூா் அரசுப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாமிடம்

மாவட்ட அளவில் நடந்த விழிப்புணா்வு நாடகப் போட்டியில் தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா். சேலம் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட் ) சாா்பாக மாவட்ட அளவி... மேலும் பார்க்க

எடப்பாடியில் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழம... மேலும் பார்க்க

மேச்சேரி சந்தையில் ரூ.3.5கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மேச்சேரியில் புதன்கிழமை வாரச்சந்தையும், ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சண்டை சேவல்கள், நாட்டுக... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில், கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கான புத்தாக்க மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தப் ப... மேலும் பார்க்க

சேலத்தில் திமுக சாா்பில் மாா்ச் 8 முதல் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு பொதுக்கூட்டம்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் அறிக்கை

சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து பொதுக்கூட்டம் மாா்ச் 8-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ஆா... மேலும் பார்க்க