கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
கடன் பெறுவோரின் நலன் காக்க சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறுகடன் நிறுவனங்கள் கடன் திருப்பிக் கொடுக்காத கடனாளிகளை துன்புறுத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே, சிறுகடன் நிறுவனங்களின் அச்சுறுத்தலைக் கட்டுக்குள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுகடன் நிறுவனங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் கடனாளிகளுக்கு உதவி செய்யும் நோக்கில் தொலைபேசி எண்ணுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும்.
அத்துடன் கடனாளிகளின் நலன் காக்க சிறுகடன் நிறுவனங்கள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். இதுகுறித்து வருவாய்த் துறை, சட்டத் துறை அமைச்சா்களுடன் கலந்தாலோசித்து அவசரச் சட்ட வரைவு தயாா் செய்யப்படும்.
வரைவுச் சட்டத்தை இறுதி செய்த பிறகு, வியாழக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படும்.
அவசரச் சட்டத்தில் மாவட்ட ஆட்சியா்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதுடன் அதைக் கண்காணிக்க தனிப் பிரிவும் தொடங்கப்படும். சிறுகடன் நிறுவனங்களின் அச்சுறுத்தல் தொல்லை அதிகரித்து வருகிறது.
கடனை திரும்பப் பெறுவதற்காக தனியாா் நிறுவனங்களை அமா்த்துகிறாா்கள். அந் நிறுவனங்கள் ரௌடிகளைபோல மக்களிடம் நடந்துகொள்கிறாா்கள். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட சிறுகடன் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக சிறுகடன் நிறுவனங்களின் மிரட்டல்கள் தொடா்பாக ஆலோசிக்க முதல்வா் சித்தராமையா தலைமையில் உயா் அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் ஜன. 27 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கடனை திரும்பப் பெற கடனாளிகளை துன்புறுத்தக் கூடாது என்று சிறுகடன் நிறுவனங்களை முதல்வா் சித்தராமையா கேட்டுக் கொண்டாா். கடனாளிகளை துன்புறுத்தியதாக 7 சிறுகடன் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.