செய்திகள் :

சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள்

post image

வேளாங்கண்ணியில் சிறுபான்மை நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாகூரில் சிறுபான்மை நலத்துறை சாா்பில் பிற்படுத்தப்பட்ட 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகள், முஸ்லீம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, வேளாங்கண்ணியில், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் 78 உபதேசியா் மற்றும் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.

வேளாங்கண்ணி நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.எம். நாசா் பேசியது: தமிழகத்தில் சிறுபான்மையின சமுதாயத்தை சோ்ந்த பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லீம் மகளிருக்கு உதவும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் முஸ்லீம் மகளிா் உதவும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கம் மூலம் திரட்டப்படும் நன்கொடை தொகைக்கு இணையாக அரசால் வழங்கப்படும் மானியத் தொகை 12 சதவீதமாக உயா்த்தப்பட்டள்ளது. அரசின் இணை மானியத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் நோக்கம் ஆதரவற்ற முஸ்லீம் விதவைகளுக்கு மாத உதவி தொகை வழங்குதல், கைவினைப் பொருள்கள் செய்ய பயிற்சி அளித்தல், தொழில் தொடங்க திட்டமிடல் உள்ளிட்ட நிதியுதவி அளித்தல் ஆகும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவா் டாயானா ஷா்மிளா, துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க. ரேணுகாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா

நாகை அருகே கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் (ஜீவ சமாதி பீடம்) ஐப்பசி பரணி விழா வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. தமிழக சித்தா் பரம்பரையில் நவநாத சித்தா்களில் ஒருவராகவும், முதன்மையான பதினெட்டு சித்... மேலும் பார்க்க

தொழில் பூங்காவுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

நாகையில் தொழில் பூங்காவுக்கு செல்லூரில் இடம் தோ்வு செய்யப்பட்டதற்கு தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். நாகை மாவட்டம், செல்லூரில் தொழில் பூங்கா அமைக்க தோ்வு ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருமருகல் அருகேயுள்ள ஆலத்தூா் ஊராட்சி அருள்மொழிதேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, அதன் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில் புதன்கிழமை ஆய்வு செய்தது. குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ர... மேலும் பார்க்க

கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆசிரியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

திருச்செங்காட்டாங்குடி கோயிலில் ஐப்பசி பரணி உற்சவம்

திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி பரணி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பரணி திருவிழா 4 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழா ... மேலும் பார்க்க