நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் முதியவா் கைது
தஞ்சாவூா் அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி வெங்கடாசலபதி நகரைச் சோ்ந்தவா் சி. ஜெயச்சந்திரன் (60). இவா் 14 வயது சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தாராம்.
இந்நிலையில், அச்சிறுமி பள்ளி வகுப்பறையில் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ட தலைமையாசிரியை விசாரித்து, வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயச்சந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.