'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுதொடா்பான புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சின்னத்துரையை போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.