Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை!
கடலூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்த காளியப்பன் மகன் மணிகண்டன் (40), தொழிலாளி. இவா், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்து குழந்தை பெற்றாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.
இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி ரத்தினம் ஆஜராகி வாதாடினாா்.