சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு லிங்கத்தடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் எஸ். ராஜதுரை (60). இவா் டிசம்பா் 30 ஆம் தேதி 11 வயதுச் சிறுமிக்கு இனிப்பு கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜதுரையை வியாழக்கிழமை கைது செய்தனா்.