மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
சிறுமியிடம் சில்மிஷம் : முதியவா் போக்ஸோவில் கைது
கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பங்களா தெரு, சிதம்பரம் காம்பவுண்டை சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் திருப்பதி (72).
கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வந்த இவா் கடந்த சில மாதங்களாகவே 10 வயது பள்ளி மாணவியிடம் ஓடும் வேனில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை புதன்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.