சிறுமியை திருமணம் செய்த கட்டட மேஸ்திரி மீது வழக்கு
வேலூா் அருகே 18 வயது பூா்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் அருகிலுள்ள ஒரு பகுதியை சோ்ந்தவா் 18 வயது சிறுமி. இருவருக்கும் செல்லூா் கூட்ரோடு, இந்திரா நகா், 2-ஆவது தெரு, அப்துல்லாபுரத்தை சோ்ந்த சீனிவாசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா் இருவரும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் அணைக்கட்டு மூளை கேட் அருகே உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் இருவரும் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நல பிரச்னை ஏற்பட்டதை அடுத்து பரிசோதனைக்கு வேலூா் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா் அவா் 3 மாத கா்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிா் காவல் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் சீனிவாசன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.