செய்திகள் :

சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி - ராஜேஸ்வரி தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபிகா. கடந்த 30-11-2020 அன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா திடீரென மாயமானாள். இப்புகார் தொடர்பாக, ராணிப்பேட்டை காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் (தந்தை வழி) பெரியம்மா புஷ்பராணியை பிடித்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பகுதியிலிருக்கின்ற கிணற்றுக்குள் சிறுமியை வீசி கொலை செய்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமி

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு 4 பெரியப்பாக்கள். இதில் 2-வது பெரியப்பா சேட்டு என்பவரின் மனைவிதான் புஷ்பராணி. இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் தனித்தனிக் குடும்பங்களாக வசித்துவந்தனர். சிறுமி கோபிகா வாசலில் அடிக்கடி சிறுநீர் கழித்ததால் புஷ்பராணி கோபப்பட்டு, சிறுமியின் தாயிடம் சண்டையிட்டு வந்தார். புஷ்பராணியின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். சண்டைப் போடும்போது `சிலோன்காரி’ என்று சிறுமியின் தாய் கிண்டலாக சொன்னதும் புஷ்பராணிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் ஒருமுறை புஷ்பராணி விபத்திலும் சிக்கியிருக்கிறார். அப்போதும் அவரைக் கவனித்துகொள்ள சிறுமியின் தாய் வரவில்லை. வீட்டிலிருந்த வயதான மாமியாரையும் பார்த்துகொள்ளவில்லை. இவையெல்லாம் சிறுமியின் தாய் மீது முன்விரோதம் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது. சிறுமியின் தாயை பழிவாங்கும் நோக்கத்திலேயே சிறுமியை கடத்தி சென்று கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் புஷ்பராணி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

பெரியம்மா புஷ்பராணி

இந்த கொலை வழக்குத் தொடர்பான விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 29) தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொலை குற்றம் புரிந்த புஷ்பராணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்து வருட கடுங்காவல் தண்டனையுடன் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, புஷ்பராணி சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர்: வழக்கறிஞரைத் தாக்கி பணம், நகைகள் கொள்ளை; சக வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது; என்ன நடந்தது?

கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர் தனது வீட்டிலிருந்தபோது இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 நபர்கள் புகுந்துள்ளனர்.அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால், ஆறுமுக... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: SI-யை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு; 3 தனிப்படை அமைத்து விசாரிக்கும் போலீஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருபவர் சுமையா பானு.இவரது கணவர் நாகலிங்கம். இவர், திருமயம் பெல் ஆலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை அர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாஜக பிரமுகரை காவு வாங்கிய பாரதியார் நிலம்!’ - பழிக்குப் பழியா… பகைக்கான விலையா ?

விபசார வழக்கில் கைதுபுதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் அகில இந்திய OBC பிர... மேலும் பார்க்க

தேனி : போலி நகை விற்பனை செய்தவர் கொன்று புதைப்பு; 7 பேர் கைது - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரும் இவரது சகோதரி மகன் கழுவா என்பவரும் (37) தேனி மாவட்டத்தில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.... மேலும் பார்க்க

பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான நகை - வழக்கு பதிவு

பாலிவுட் நடிகை நேகா மாலிக், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஷானாஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை செய்து வந்தார். நடிகை நேகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடியவர் என்ப... மேலும் பார்க்க

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து ... மேலும் பார்க்க