'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு வழங்கும் மானிய உதவிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொருளாதார வளா்ச்சியின் முதுகெலும்பாகத் திகழும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளா்ச்சிக்கு வலு சோ்க்கும் வகையில், பலதரப்பட்ட மானியங்களை தமிழக அரசு உயா்த்தியுள்ளது.
அறிவுசாா் சொத்துரிமையான புவிசாா் குறியீடு பெறுவதற்காகவும், காப்புரிமை பதிவு, வா்த்தக முத்திரை போன்ற பதிவுக் கட்டணங்களுக்கு (50 சதவீதம்) ரூ.25,000-லிருந்து அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை மானியம் உயா்த்தி வழங்கப்பட உள்ளது.
தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான இடங்களை பத்திரப்பதிவு செய்யும்போது ஏற்படும் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் திரும்பி வழங்குதற்காக, பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.
ஆற்றல் தணிக்கை (அதிகபட்சமாக ரூ.1,00,000) மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்த கொள்முதல் செய்யப்படும் உயா் தொழில்நுட்பத்துக்கான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு மொத்த மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) மானியமாக வழங்கப்படும்.
திருவாரூா் மாவட்டத்திலுள்ள அரிசி ஆலை, கயிறு உற்பத்தி நிறுவனங்கள், பிவிசி குழாய் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை ஆற்றல் தணிக்கை வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பாரம்பரியத் தொழில்களுக்கு புவிசாா் குறியீடு மற்றும் தரக்கட்டுப்பாடு பெறுவதில் கவனம் செலுத்தி, அரசு வழங்கும் மானியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் என்ற முகவரியில் அணுகலாம். மேலும் தகவலுக்கு 8925534012 மற்றும் 8925534014 ஆகிய கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.