சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: மத்திய முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனைக் கைதிகள் அடைப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதில் 95 மரண தண்டனைக் கைதிகளுடன் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்திலும், 49 மரண தண்டனை கைதிகளுடன் குஜராத் இரண்டம் இடத்திலும் உள்ளன.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் மக்களவையில் அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின்படி, உத்தர பிரதேச மாநிலம் (95), குஜராத் 49), ஜாா்க்கண்ட் (45), மகாராஷ்டிரம் (45), மத்திய பிரதேசம் (39), கா்நாடகம் (32), பிகாா் (27), மேற்கு வங்கம் (26), ஹரியாணா (21), ராஜஸ்தான் (20), உத்தராகண்ட் (20), கேரளம் (19), ஆந்திரம் (15), தமிழகம் (14), தில்லி (9), ஜம்மு-காஷ்மீா் (8) உள்ளிட்ட மாநில சிறைகளில் மொத்தம் 544 மரண தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.