ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ...
சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிக்கியிடம் மருத்துவர்கள் எப்படி நேர்ந்தது என்று கேட்டதற்கு, சிலிண்டர் வெடித்து, தீப்பற்றியதாகக் கூறியிருக்கிறார்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறையினரிடம் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.
ஆனால், காவல்துறையினரோ, நிக்கி வீட்டில் சிலிண்டர் வெடித்ததற்கான எந்த தடயத்தையும் காணவில்லை. மரணமடையும் தருவாயில் நிக்கி அவ்வாறு கூறியது ஏன் என்றும், அவ்வாறு சொல்ல வலியுறுத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வரதட்சிணைக் கேட்டு மனைவி நிக்கியை தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்த வழக்கில் விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கியை துன்புறுத்தும் விடியோக்களும், அவர் தீ வைத்து எரிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை பலனின்றி நிக்கி பலியான நிலையில், 80 சதவீத தீக்காயமே மரணத்துக்குக் காரணம் என உடல் கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நிக்கியின் சகோதரி காஞ்சன் அளித்த புகாரில், வரதட்சிணை கேட்டு, கணவர் விபின்தான், 6 வயது மகன் கண் முன்னே, தீவைத்துக் கொளுத்தியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.