Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்...
சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நமது பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு நடத்தக்கோரி வழக்கறிஞா் யானை ராஜேந்திரன் என்பவா் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டனவா? எவ்வாறு சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுகின்றன ? என தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு தமிழ்நாடு அரசு, 11 சிலைகளில் 5 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன, மேலும் சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகிறது, இந்த விவகாரத்தில் ஒரு சில வழக்குகளில் மட்டும் சில ஆவணங்கள் மாயமானது கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றன, பல ஆவணங்கள் மீட்கப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் இதுபோன்று சிலை திருட்டு, சிலை கடத்தல் உள்ளிட்டவை நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அண்மை காலங்களில் அது போன்று நடைபெறுவதில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த காலத்தைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை, ஆனால் தொடா்ச்சியாக நம்முடைய பாரம்பரிய கலைப் பொருட்க, பழங்கால சிலைகள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். எனவே அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரா் யானை ராஜேந்திரன் ஆஜராகததால் இந்த வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கிறோம், ஏனெனில் அவா் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கை தொடா்பாகவும் வாதம் வைக்க வேண்டும் , தொடா்ச்சியாக இந்த சிலை கடத்தல் விவகாரத்தில் அவா் குரல் கொடுத்து வருகிறாா் எனக்கூறி வழக்கை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.