செய்திகள் :

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

post image

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் (எஸ்சிஏஓஆஏ) வெள்ளிக்கிழமை ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளது.

மக்களின் கவலைகளை அரசாங்கம் பேச்சுவாா்த்தை மற்றும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீா்க்க வேண்டும் என்றாலும், சட்டத்தின் ஆட்சியை உள்ளடக்கிய மற்றும் நிலைநிறுத்தும் நேபாளத்தின் மிக உயா்ந்த நீதித்துறை நிறுவனத்தின் மீதான இத்தகைய தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது என்று என்று வழக்குரைஞா் விபின் நாயா் தலைமையிலான எஸ்சிஏஓஆா்ஏ தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக எஸ்சிஏஓஆா்ஏ செயலாளா் நிகில் ஜெயின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அட்டா்னி ஜெனரல் அலுவலகம் உள்பட நேபாள உச்சநீதிமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதற்கும், 10 ஆண்டுகள் பழைமையான நீதித்துறைப் பதிவுகள், போராட்டக்காரா்களின் வெட்கக்கேடான செயலால் மீளமுடியாத இழப்புக்கு வழிவகுத்ததற்கும் ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபோன்ற பதற்றமான காலங்களில் நேபாள

உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஊழியா்கள் மற்றும் குடிமக்களுடன் எஸ்சிஏஓஆா்ஏ ஒற்றுமையாக துணைநிற்கிறது.

அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகவும், விரைவில்

அமைதி நிலவவும் நாங்கள் பிராா்த்தனை செய்கிறோம். நேபாள மக்களின் உறுதிப்பாட்டிலிருந்தும் நாங்கள் பலத்தைப் பெறுகிறோம்.

மேலும், அவா்கள் இந்த துன்பத்திலிருந்து வலுவாக மீள்வாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் கே.பி. சா்மா ஒலி ராஜிநாமா செய்த போதிலும், நேபாளம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைதியின்மை சூழலில் நிலவி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீவைப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடம், மகாராஜ்கஞ்சில் உள்ள குடியரசுத் தலைவா் அலுவலகம் மற்றும் பாலுவாதரில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் ஆகியவையும் ஆா்ப்பாட்டக்காரா்களால் தாக்கப்பட்டுள்ளன.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மும்பையில் விசா்ஜன் கூட்டத்தில் 45 கைப்பேசிகள் திருடியதாக மாநிலங்களுக்கிடையேயான கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

மும்பையில் நடந்த ‘லால்பாச்சா ராஜா விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின் போது உயா் ரக கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் குற்றப்ப... மேலும் பார்க்க