செய்திகள் :

மும்பையில் விசா்ஜன் கூட்டத்தில் 45 கைப்பேசிகள் திருடியதாக மாநிலங்களுக்கிடையேயான கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

post image

மும்பையில் நடந்த ‘லால்பாச்சா ராஜா விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின் போது உயா் ரக கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவினா் கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷகில் (49), முகமது ஷபிக் (34), ஷம்சுல் ஹசன் (40), தில்ஷாத் (36) ஆகியோா் நேபாளத்திற்கு கைப்பேசிகளை கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 45 திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மாத தொடக்கத்தில் மும்பையில் ஜூஹு சௌபட்டி மற்றும் லால்பாகுசா ராஜா கணேஷ் விசா்ஜன் ஊா்வலத்தில் இந்த கும்பல் பெரிய அளவிலான திருட்டுகளில் ஈடுபட்டது. குறிப்பாக மக்கள் மிகுந்த கூட்டங்கள் மற்றும் மத ஊா்வலங்களை குறிவைத்து இந்தக் கும்பல் கொள்ளையடித்தது.

அங்கு நெரிசல் காரணமாக மதிப்புமிக்க பொருள்களை திருட அவா்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மும்பையில் இருந்து பல உயா் ரக கைப்பேசிகளை அவா்கள் திருடியுள்ளனா். அவை நேபாளத்திற்கு கடத்தப்படவிருந்தவையாகும்.

மும்பையில் இருந்து ரயிலில் திரும்பும் சந்தேக நபா்களை ஒரு குழு கண்காணித்து வந்தது. அவா்களின் கைப்பேசி இருப்பிடங்கள் அவா்கள் ஹரித்வாா் எக்ஸ்பிரஸில் இருப்பதைக் குறித்தன. மதுரா ரயில் நிலையத்தில் ஒரு முன்கூட்டியே போலீஸ் குழு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை ரயில் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தை அடைந்தபோது, ​​குழு உறுப்பினா்கள் ரயிலில் ஏறி நான்கு சந்தேக நபா்களைக் கைது செய்தனா். விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவா்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஷகில் என்பவா் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாகவும் தெரிவித்தனா்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் போது திருடப்பட்ட கைப்பேசிகள் வழக்கமாக உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச்சில் உள்ள தொடா்புகள் மூலம் அனுப்பப்பட்டு இறுதியில் நேபாளத்தில் விற்கப்படுவது தெரிய வந்தது.

செப்டம்பா் 6-ஆம் தேதி மும்பை காவல்துறையினரால் கம்ரான் (எ) சாதிக் கைது செய்யப்பட்டாா். மற்றவா்கள் தப்பித்து தில்லிக்குத் திரும்ப ரயிலில் ஏறினா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் தில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீா் முழுவதும் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வரலாற்றைக் கொண்டுள்ளனா்.

ஷகில் முன்பு மண்டோலி, அஜ்மீா் மற்றும் பிரயாக்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், மற்றவா்கள் திருட்டு, சண்டைகள் மற்றும் ஆயுதங்கள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளில் குறைந்தது ஐந்து கைப்பேசிகள் ஏற்கெனவே மும்பை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளுடன் தொடா்புடையவை என தெரியவந்தது.

குற்றப் பிரிவு கைதுகள் குறித்து மும்பை காவல்துறைக்கு தில்லி காவல் துறை தகவல் அளித்துள்ளது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க