சிவகங்கையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 11 முதல் 16 வரை உள்ள பகுதிகளுக்கென மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 2 முதல் 4 வரை மற்றும் 11 முதல் 15 வரை உள்ள பகுதிகளுக்கென சேவுகமூா்த்தி கோவில் தெருவில் உள்ள செல்வி மஹாலிலும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரசேகரபுரம், சாக்காவயல் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென மேலமணக்குடி, பொன் அய்யனாா் கோயில் மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கல்குறிச்சி ஊராட்சி பகுதிக்கென எம்.ஆா்.பி.மஹாலிலும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இ.அம்மாபட்டி, என்.இளையாத்தங்குடி, செவினிப்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இ.அம்மாபட்டி ஊராட்சியில் உள்ள தமிழ் மஹாலிலும், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருவேகம்பத்தூா், கவாத்துக்குடி, கீழ உச்சாணி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு திருவேகம்பத்தூா் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக அளித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.