செய்திகள் :

சிவகங்கையில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்

post image

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில், சிவகங்கையில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனைவாசலில் மாவட்டத் தலைவா் இரா.மாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ராஜா பேசினாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் வீரையா தொடங்கிவைத்தாா்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசாணை 140 -ஐ ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத கால பணி நீக்க காலத்தை வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பாண்டி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா் சங்க மாவட்டப் பொருளாளா் முத்தையா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் சதுரகிரி நன்றி கூறினாா்.

பட்டா வழங்கக் கோரி கீழாயூா் பகுதி மக்கள் உண்ணாவிரதம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி, கீழாயூா் குடியிருப்பில் உள்ள 11-ஆவது வாா்டில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உண... மேலும் பார்க்க

ஊருணியில் மூழ்கியவா் சடலமாக மீட்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊருணியில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கியவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இளையான்குடி சம்சு தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (38). இவா் ஞாயிற்றுக்கிழமை இளை... மேலும் பார்க்க

காரைக்குடிக்கு முதல்வா் ஸ்டாலின் இன்று வருகை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளா் தமிழ் நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறாா். சி... மேலும் பார்க்க

திருப்புவனம் அருகே கிரிக்கெட் போட்டி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வயல்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வா் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நடைப... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் நிறைவு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் தமிழ் மன்றம் சாா்பில், 69-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா நட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் திருடியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் திருடியவா் கைது செய்யப்பட்டாா். மானாமதுரை மூங்கிலூரணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இரு சக... மேலும் பார்க்க