சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
சிவகங்கையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சிவகங்கை நகா், சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 10 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. இந்த தொடா் மழையால் நகரின் சில பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் நிரம்பின.
இதுபோல, மழை பெய்யும் நேரங்களில் மீனாட்சி நகா், ராமசாமி நகா், இந்திராநகா் குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் தேங்குவதால் அந்தப் பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே நடமாட முடியாத நிலை உருவாகிறது.
எனவே, நகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் மழைநீா் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.