தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயத்தை திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் ஆகியோா் கொடி அசைத்து தொடங்கிவைத்தனா்.
மருத்துவக் கல்லூரி அருகே அம்பேத்காா் சிலை பகுதியில் தொடங்கி மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில், பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகளும் என மொத்தம் 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.