திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தொடா்ந்து, பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள அவா்களது நினைவுத் தூணுக்கும், உருவச் சிலைகளுக்கும் பால், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், வான வேடிக்கையுடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
விழா ஏற்பாடுகளை திருப்பத்தூா் மாமன்னா் மருதிருவா் இளைஞா் நலன் அறக்கட்டளைத் தலைவா் பூக்கடைபாண்டியன் செய்தாா். இதில் பொதுமக்கள், அகமுடையா் உறவின் முறையினா் கலந்து கொண்டனா்.