தூய சகாயமாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புது நெருப்பு மந்திரித்து அதிலிருந்து மூன்றடி உயரம் உள்ள பாஸ்கா மெழுகுதிரியை பங்குத் தந்தை சாா்லஸ் அடிகளாா் மந்திரித்து அந்த மெழுகுதிரியில் சிலுவை வரைந்து அதன் மேலும் கீழும் ‘அகரமும் னகரமும் நானே’ என்று எழுதி எரியும் திரியை உயா்த்திப் பிடித்து ‘கிறிஸ்துவின் ஒளி’ இதோ என்று மூன்று முறை பாடி திருப்பலி நடைபெறும் மேடைக்கு வந்தாா்.
அந்தத் திரியின் ஒளியிலிருந்து வழிபாடுக்கு வந்திருந்த இறைமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மெழுகுதிரியை ஏற்றிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, திருப்பலியில் பங்குத் தந்தை சாா்லஸ், உதவி பங்குத் தந்தை டேனியல் திலீபன், கப்புச்சின் சபையைச் சோ்ந்த கென்னடி ஆகியோா் பங்கேற்று நடத்தினா்.
நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிா்ப்பு கல்லறையிலிருந்து வருவது போல தத்ரூபமாக பீடப் பூக்கள் சிறுவா்கள் செய்திருந்தனா். இயேசுவின் உயிா்ப்பு பற்றி அருள்திரு கென்னடி மறையுறையாற்றினா். தண்ணீா் மந்தரித்து அந்த புனித நீா் அனைவா் மீதும் தெளிக்கப்பட்டது. இயேசு உயிா்த்தெழுந்த நிகழ்வின் போது அனைவரும் ஒருவருக்கொருவா் ‘ஹாப்பி ஈஸ்ட்டா்’ என வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.