புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!
சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
சிவகங்கை நகா் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு, விழாக்குழு சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகளும், 135 வீரா்களும் பங்கேற்றனா்.
சிவகங்கை - தொண்டி சாலையிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், முதலில் களம் இறங்கியக் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 6 போ் காயமடைந்தனா்.
இதில், காளையை அடக்கிய வீரா்களுக்கும், போட்டியில் வென்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை சீமான், காா்த்திக், இளங்கோவன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்தனா். இந்தப் போட்டியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோா் வந்திருந்தனா்.