"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது ...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு ஆகாஷ் தீப் சமர்ப்பித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் (ஜூலை 6) நிறைவடைந்தது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
வெற்றியை சகோதரிக்கு சமர்ப்பித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்துக்கு எதிராக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில், இந்த வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரிக்கு சமர்ப்பித்தாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு மாதங்களுக்கு முன்பாக எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து யாரிடமும் நான் எதுவும் பேசவில்லை. ஒவ்வொரு முறையும் பந்துவீசுவதற்காக பந்தினை கையில் எடுக்கும்போதெல்லாம், என்னுடைய சகோதரியின் நினைவு எனக்கு வரும்.
பந்துவீச்சில் நான் சிறப்பாக செயல்பட்டதை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். என்னுடைய இந்த சிறப்பான செயல்பாட்டை எனது சகோதரிக்காக சமர்ப்பிக்கிறேன். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை அவரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
Akash Deep dedicated the victory against England to his sister, who is suffering from cancer.
இதையும் படிக்க: ஷுப்மன் கில் விராட் கோலியின் நகல்: முன்னாள் இங்கிலாந்து வீரர்