செய்திகள் :

பும்ராவை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: இங்கிலாந்து பயிற்சியாளர்

post image

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தயாராக வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் (ஜூலை 6) நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு எதிராக சிறப்பான திட்டங்களுடன் இங்கிலாந்து அணி தயாராக இருக்க வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம். பும்ராவின் பந்துவீச்சு சவாலை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி சிறப்பான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். நாங்கள் நினைத்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானவர்கள் என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 10 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

The England team's head coach has said that the team should prepare to face Jasprit Bumrah.

இதையும் படிக்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஜிம்பாப்வே ஃபாலோ ஆன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டா... மேலும் பார்க்க

முச்சதம் விளாசி வரலாறு படைத்த வியான் முல்டர்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி வரலாறு படைத்துள்ளார்.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கி... மேலும் பார்க்க

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை சமர்ப்பித்த ஆகாஷ் தீப்!

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு ஆகாஷ் தீப் சமர்ப்பித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் (ஜூலை 6) நிறை... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: முதல்முறையாக மகுடம் சூடிய திருப்பூர் தமிழன்ஸ்!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி மகுடம் சூடியது.திண்டுக்கல்லில் இன்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாம்பியன் யார்? திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 221 ரன்கள் இலக்கு!

திண்டுக்கல்: தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மகுடம் சூட திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இன்று(ஜூலை ... மேலும் பார்க்க