நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள். "சிவகாசி மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சாம் டேவிட் (வயது 30). இன்னும் திருமணமாகவில்லை. விருதுநகரில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் பொருட்காட்சிக்குப் பொழுதுபோக்காக வந்த பள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் பகுதி நேரமாக வேலை செய்ய சாம் டேவிட்டிடம் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
அவரும், பொருட்காட்சி தொடர்பாக நோட்டீஸ் விளம்பரம் கொடுப்பது, டிக்கெட் கொடுப்பது மேலும் தனக்கு உதவியாக இருக்கும்படி சிறுவர்கள் இருவருக்கும் வேலை அளித்துள்ளார்.

அத்துமீறல்
இந்தநிலையில் பொருட்காட்சி தொடர்பாக சிவகாசியில் விளம்பரம் செய்யவேண்டும் எனக்கூறி சிறுவர்கள் இருவரையும் சேம்டேவிட் சிவகாசிக்கு வரசொல்லியுள்ளார். அதன்படி சிவகாசிக்கு வந்த பள்ளி சிறுவர்கள் இருவரும் மருதுபாண்டியன் நகரில் உள்ள சாம்டேவிட் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, சிறுவர்களுக்கு இருவருக்கும் சாம் டேவிட் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். முன்னதாக, அந்த குளிர்பானத்தில் மயக்கமருந்து ஏதோ கலந்து தயார் நிலையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குளிர்பானம் குடித்த சிறுவர்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே அரை மயக்கத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் படுக்கையறைக்கு அழைத்துச்சென்ற சாம்டேவிட், பள்ளி சிறுவர்களை பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிறுவர்களுக்கு மயக்கம் தெளிந்ததும் இதுதொடர்பாக வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதையடுத்து பள்ளி சிறுவர்கள் இருவரும் தங்களுக்கு நடந்ததை வீட்டு பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, இதுதொடர்பாக சிவகாசி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.