சிவகிரி அருகே புகையிலை பொருள்கள் விற்ற இளைஞா் கைது
சிவகிரி அருகே புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி அருகே உள்ள சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூட தெருவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, தனிப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததாம். இதையடுத்து சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் அப் பகுதியில் சோதனை நடத்தினாா்.
அப்போது சந்தேகத்தின்பேரில் ரகு மகன் சுமிஸ் (33) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் சுமிஸை கைது செய்தனா்.