1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
சிவகிரி அருகே போக்ஸோ சட்டத்தில் காவலா் கைது
சிவகிரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஊத்துமலை காவல் நிலைய காவலா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் சைலேஷ்(44).
இவா், இதற்கு முன்பு சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சைலேஷை கைது செய்தனா்.