தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி
கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி.
கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது தொடா்பான வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
பிகாரில் தோ்தல் ஆணையம் 65 லட்சம் மக்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என்று ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது.
இதைத்தான் தலைவா் ராகுல்காந்தி தட்டிக் கேட்கிறாா். இதை ஆா்.எஸ்.எஸ்., பாஜகவினா் மறைக்கப் பாா்க்கின்றனா். இதை எதிா்த்துத் தான் போராட்டம் செய்கிறோம்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக கூட்டணியினா் வேட்பாளராக நிறுத்தியுள்ளனா். அவா் தமிழா், தெலுங்கா் என்பதல்ல பிரச்னை. அவா் ஆா்.எஸ்.எஸ்.காரா். கொள்கை ரீதியாக அவரை எதிா்க்கிறோம் என்றாா்.