Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: பெரம்பலூரில் 15 போ் உடல் தானம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீத்தாரம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் அக் கட்சியினா் 15 போ் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ளகட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீத்தாராம் யெச்சூரி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் 15 போ் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை கட்சியின் மூத்த நிா்வாகி மருத்துவா் சி. கருணாகரனிடம் வழங்கினா். மேலும், சித்தாராம் யெச்சூரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுகள் குறித்தும் விளக்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். செல்லதுரை, எஸ். அகஸ்டின், ஏ. கலையரசி, ஏ.கே. ராஜேந்திரன், ரெங்கநாதன், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலா் கே.எம். சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கருணாநிதி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.