செய்திகள் :

"சீனியாரிட்டியில் 9வது இடத்தில் இருப்பவருக்கு டிஜிபி பதவியா?" - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

post image

கோவை பூ மார்கெட் தெப்பக்குளம் மைதானத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “திமுக ஆட்சி 4 ஆண்டுகளை முடிந்துள்ளது. மிக மோசமான ஆட்சியை நடத்தியுள்ளனர். திமுக குடும்பம் ஒரு மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். 

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால் துர்கா ஸ்டாலின் தினசரி ஒரு கோயில் சென்று புகைப்படம் எடுத்துப் பதிவு செய்கிறார். அவர்கள் குடும்பம் இந்து மக்களுக்கு எதிரானதல்ல என்பதற்காகப் பதிவு செய்கிறார்கள். 2026 தேர்தலுக்கு முன்பாக திமுக பல கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவார்கள். மக்கள் அதை நம்பக் கூடாது.  

தமிழ்நாட்டில் டிஜிபியாக ஒருவர் பொறுப்பேற்றிருக்கிறார். டிஜிபியாக பொறுப்பேற்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றதைப் பார்த்திருக்கிறோமா. இதுபோன்ற அவலத்தை திமுக அரங்கேற்றியுள்ளது.

சங்கர் ஜிவாலுக்குப் பிறகு 6 பேர் டிஜிபியாகப் பொறுப்பேற்க காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். 6 பேரில் முதல் 3 பேரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

டிஜிபி வெங்கட்ராமன் IPS
டிஜிபி வெங்கட்ராமன் IPS

அந்த 6 பேரில் யாருமே நமக்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதால் அப்படியே விட்டிருக்கிறார்கள். சீனியாரிட்டியில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவருக்கு டிஜிபி பதவி கொடுக்க முடியாது. அதனால் முதல்வர் பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளனர். காவல்துறை எப்படி விளங்கும். கையைக் கட்டிப் போட்டு ஓடு என்றால் காவல்துறை எப்படி ஓடும்.

இப்படிப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும். தமிழகத்தில் இன்று 62% குழந்தைகள் தனியார்ப் பள்ளியில் படிக்கிறார்கள். 37% குழந்தைகள் அரசுப் பள்ளிகள் படிக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபோது 43% குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளது.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

உதயநிதி ஸ்டாலின் எங்குச் செல்கிறாரோ அங்கெல்லாம் அவரின் அருகில் செல்வது தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் வேலை. பள்ளிக் கல்வித் துறை மிகப்பெரிய பொறுப்பு. ஐயன் கக்கன் இருந்த இடம். தற்போது பெட்டர் மாஸ் லைட் எடுத்துக் கொண்டு செல்பவர் எல்லாம் கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" - இபிஎஸ் தாக்கு

"டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அ... மேலும் பார்க்க

ஆற்காடு: `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அடித்து விரட்டப்பட்டாரா முதியவர்? நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று (3-9-2025) நடைபெற்றது.இந்த முகாமில், வெங்கடபதி என்கிற 6... மேலும் பார்க்க

PMK: ``உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவரை கொடூரமாக தாக்கியது மனிதத் தன்மையற்ற செயல்'' - அன்புமணி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நேற்று (3.9.2025) நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட செய்தி வி... மேலும் பார்க்க

``ரஷ்யாவின் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லையா?'' - நிருபரிடம் கொந்தளித்த ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது.பிற நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஆனாலும், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ... மேலும் பார்க்க

டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains

எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி என்ன செய்கிறார்? செப் 5-ல், அதிமுகவில் பெரும் புயல் காத்திருக்கிறது என கூறப்படுகின்றது.மறுபுறம், அன்புமணியை நீக்கும் ... மேலும் பார்க்க