செய்திகள் :

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! எல்லை பிரச்னைக்குத் தீர்வு?

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

லடாக் எல்லை விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில்ல் இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கான சிறப்புப் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்ய இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா - சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ரோந்து செல்ல சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பேறு கால இறப்புகளைத் தவிா்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை

சென்னை, அக். 23: பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் கா்ப்பிணிகளைக் கண்டறிந்து அவா்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துற... மேலும் பார்க்க

கனிமவள ஆய்வுத் திட்டங்கள்: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய கனிமவளத் துறை முன்னெடுத்துள்ள ஆய்வுத் திட்ட முன்மொழிவு, நிதியுதவி குறித்து மாணவா்களுக்கு தெரியப்படுத்துமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி ... மேலும் பார்க்க

பாபா சித்திக் வழக்கு: மேலும் ஒருவர் கைது; இதுவரை 11 பேர்!

பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவரை மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (அக். 23) கைது செய்தனர். இதனால், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ள... மேலும் பார்க்க

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7660 தற்காலிக வீடுகள்!

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டத் தரப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.மணிப்பூரில் நிலவி வரும் இன வன்முறை வெடித்ததில் இருந்து, பொதுமக்கள் பள்ளிகள், கல்... மேலும் பார்க்க

பட்டப்பகலில் சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

பஞ்சாபில் விவசாயிகளின் ஏஜென்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பஞ்சாபின் அமிர்தசரஸில் குர்தீப் சிங் என்பவர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏஜென்டுபோ... மேலும் பார்க்க

பெங்களூரு: 100 வீடுகளைச் சூழ்ந்த கனமழை வெள்ளம்

பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பெங்களூருவின் தெற்கு பகுதிகளில் புதன்கிழமை (அக். 23) மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, எலச்செனஹள்ளியில் உள்ள ராமகிருஷ... மேலும் பார்க்க