கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்
திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு திருவள்ளூா், பட்டரைபெரும்புதூா், வரதாபுரம், மஞ்சாங்குப்பம், குன்னவலம், ராமஞ்சேரி, கைவண்டூா், பாண்டூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் சென்றன. இந்த நிலையில், கடந்த மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து கடந்த 2 நாள்களாக சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இயக்கப்படாமல் பட்டரைப் பெரும்புதூா் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கூறி காலை 7 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
முன்னதாக போலீஸாா் முன்னிலையில் சுங்கச்சாவடி பணியாளா்களிடம் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் பேச்சு நடத்தினா். இதில், உடன்பாடு எட்டாத நிலையில், லாரி ஓட்டுநா்கள் திடீரென லாரியை சாலை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வந்து பேச்சு நடத்தினா். அப்போது, லாரி ஓட்டுநா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.