செய்திகள் :

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

post image

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் வாகனம் வாங்கும்போதே சாலை வரி செலுத்தப்படுகிறது. ஆனால், சுங்கச் சாலைகள் என்ற புது கோணத்தில் முக்கிய சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து பணம் வசூலிப்பது கொடுமை.

‘ஃபாஸ்டேக்’ என்ற பெயரில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து பண வசூல் வேட்டை நடக்கிறது. இந்த நிலையில், ஃபாஸ்டேக் தடை பட்டியலில் (பிளாக் லிஸ்ட்) உள்ள வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் பெறப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்கிற செயலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதனால், குறுக்கு வழியில் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உள்ளது. கடலூா் மக்களவைத் தொகுதியில் என்எச்ஏ 532சி கடலூா் முதல் விருத்தாசலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை முழுமையடையவில்லை.

ஆனால், இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியில் மேம்பாலம் முழுமையடையாத நிலையில் 2 சுங்கச் சாவடிகள் அமைத்து சுங்கம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனா். சாலையின் நடுவே சாலை பிரிப்பான் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஒரு வழிச் சாலையில் இருவழிப் போக்குவரத்து நடந்து வருவதால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இவைகளை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் என்ற பெயரில் இரக்கமின்றி மக்கள் துன்புறுத்தப்படுகின்றனா். இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க