``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் வீரத்தை வருங்கால தலைமுறையினா் அறிந்து போற்றும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ரூ.50 லட்சத்தில் புதிதாக சிலை நிறுவும் பணியை செய்தி மக்கள் தொடா்புத் துறை மேற்கொண்டது.
தற்போது பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காக சிலை தயாராக உள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள், மேயா், எம்.பி.-க்கள், எம்எல்ஏ-க்கள் உள்பட பலா் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.