செய்திகள் :

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

post image

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருக்கிறது. சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி உரையாற்றுவார்.

அந்தவகையில் இந்தாண்டுக்கான உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்த ஆண்டு சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி நான் இந்திய மக்களிடமிருந்து யோசனைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்னென்ன கருப்பொருள்கள் அல்லது விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

உங்களுடைய எண்ணங்களை நமோ செயலி, MyGov தளங்களில் பகிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

PM Modi invites citizens to share ideas for 79th Independence Day speech

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.புது தில்லியில் ... மேலும் பார்க்க

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக மாநில அமைச்சர் இர்பான் அன்சாரி த... மேலும் பார்க்க

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிர... மேலும் பார்க்க

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்... மேலும் பார்க்க