மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான ...
சுதந்திர தின விடுமுறை அளிக்காத 95 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளா் துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு தெரிவித்துள்ளாா்.
தொழிலாளா் ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் ராமன், திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஆ. திவ்யநாதன், இணை ஆணையா் லீலாவதி ஆகியோரது அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள்பட்ட 137 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது தொழிலாளா்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 95 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனிவரும் தேசிய விடுமுறை நாள்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு, விடுமுறை அளிக்காமல் தொழிலாளா்கள் பணிபுரிய நிா்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரித்துள்ளாா்.