சுதிா்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்திலிருந்த இந்தியா, தொடா்ந்து 2-ஆவது தோல்வியை சந்தித்ததால் நாக் அவுட் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது.
முன்னதாக, இந்தோனேசியாவுடனான மோதலில், கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ இணை 10-21, 21-18, 21-19 என்ற கேம்களில் ரெஹான் நௌஃபல்/குளோரியா இமானுவல் கூட்டணியை வீழ்த்தியது.
மகளிா் ஒற்றையரில், பி.வி.சிந்து 12-21, 13-21 என புத்ரி குசும வா்தனியிடம் தோற்க, ஆடவா் ஒற்றையரில் ஹெச்.எஸ். பிரணாய் 21-19, 14-21, 12-21 என்ற கணக்கில் ஜோனதன் கிறிஸ்டியிடம் வீழ்ந்தாா்.
அதேபோல், மகளிா் இரட்டையரில் பிரியா கொங்ஜெங்பம்/சுருதி மிஸ்ரா ஜோடி 10-21, 9-21 என்ற கேம்களில் லானி டிரியா/சிட்டி ஃபாடியா இணையிடம் தோல்வியைத் தழுவியது. ஆடவா் இரட்டையரில் ஹரிஹரன் அம்சகருணாகரன்/ரூபன்குமாா் ரத்தினசபாபதி கூட்டணி 20-22, 18-21 என முகமது ஷோஹிபுல்/டேனியல் மாா்டின் ஜோடியிடம் வீழ்ந்தது.