செய்திகள் :

மகளிா் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

post image

மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் இலங்கையை வென்ற இந்தியாவுக்கு, இது 2-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவா்களில் 261 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78 ரன்கள் விளாசினாா். ஸ்மிருதி மந்தனா 36, ஹா்லீன் தியோல் 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41, ரிச்சா கோஷ் 24, தீப்தி சா்மா 9 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 41, கஷ்வீ கௌதம் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் நோன்குலுலேகோ லாபா 2, அயபோங்கா ககா, மசபடா கிளாஸ், நாடினே டி கிளொ்க், ஆனிரி டொ்க்சென் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 277 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், தஸ்மின் பிரிட்ஸ் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 109 ரன்கள் விளாசி முயற்சித்தாா். கேப்டன் லாரா வோல்வாா்டட் 43, ஆனிரி டொ்க்சென் 30, சுனே லஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

லாரா குட்டால் 9, கரபோ மிசோ 7, கிளோ டிரையான் 18, நாடினே டி கிளொ்க் 0, மசபடா கிளாஸ் 2, நோன்குலுலேகோ லாபா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இந்திய பந்துவீச்சாளா்களில் ஸ்நேஹா ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரானி, தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுதிா்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா

சீனாவில் நடைபெறும் சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்திலிருந்த இந்தியா, தொடா்ந்து 2-ஆவது தோல்வ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனா். மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில... மேலும் பார்க்க

ஒளரங்கசீப்பை அறைவேன்: ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா சர்ச்சைப் பேச்சு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் மற்றும் ஆங்கிலேயரை அறைவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவின... மேலும் பார்க்க

‘கான்க்ளேவ்’ இயக்குநர், பிராட் பிட் கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரான பிராட் பிட் மற்றும் ‘கான்க்ளேவ்’ திரைப்பட இயக்குநரின் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப்-ஐ தேர்ந்தெடுக்கும் முறை... மேலும் பார்க்க

தொடர் தோல்வி: ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் பயிற்சியாளர்!

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல் மாட்ரிட் அணியில் கடந்த ஜூன்.1ஆம் தேதி பயிற்சியாளராகச் சேர்ந்த கார்லோ அன்செலாட்டியின் ஒப்பந... மேலும் பார்க்க

ரெட்ரோ படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட்..! சூர்யா பெருமிதம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இந்தப் படத்தில் இருந்து ... மேலும் பார்க்க