செய்திகள் :

சுபான்ஷு சுக்லா: விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி வந்தால் எப்படி சிகிச்சை கொடுக்கப்படும்?

post image

பூமியில் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்ல முடியும், சிசிச்சை பெற முடியும்.

ஆனால், விண்வெளியில் உடல்நிலை பாதித்தால், விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

அதற்கான பதிலைக் கடந்த ஜூன் மாதம், இந்தியா சார்பில் விண்வெளி சென்று வந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தருகிறார்.

"விண்வெளியில் ஆம்புலன்ஸ், மருத்துவமனை, எமர்ஜென்சி ரூம் கிடையாது. அப்போது எப்படி விண்வெளி வீரர்கள் மருத்துவ எமர்ஜென்சிகளில் இருந்து பிழைக்கிறார்கள்? விண்வெளி வீரர்கள் சி.பி.ஆர் எப்படிச் செய்வோம் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்" என்றார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா | சர்வதேச விண்வெளி மையம்
விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது...

தொடர் ஒத்திகை

விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி என்பது பூமியில் ஏற்படுவதுப்போல இருக்காது.

அங்கு மருத்துவமனை எதுவும் இல்லை என்பதால் விண்வெளி வீரர்களே தங்களுடைய சொந்த மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் தங்களை ட்ரெயின் செய்துகொள்ள வேண்டும்.

அவர்கள் பல மணிநேரம் செய்த ஒத்திகைகள் மற்றும் சில திறமையான நுட்பங்களை நம்பியே அங்கு வாழ்வும், மரணமும் இருக்கிறது.

விண்வெளியில் டாக்டர்கள், நர்ஸ்கள் யார்?

சுக்லா: "விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, உதவி வராது என்பது நமக்கு தெளிவாகத் தெரியும். அங்கு மருத்துவமனை இருக்காது, எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன்கள் இருக்கமாட்டார்கள்.

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை மிக வேகமாக நீங்கள்தான் உறுதி செய்ய வேண்டும். சூழலைப் பொறுத்து, நீங்கள் டாக்டராகவோ, நர்ஸாகவோ, சப்போர்ட்டிங் ஸ்டாபாகாவவோ மாற வேண்டும். எதற்கும் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

'எது வேண்டுமானாலும் நடக்கலாம்?' என்கிற பட்டியலில் முதலில் இருப்பது, 'மெடிக்கல் எமர்ஜென்சி'தான். நாங்கள் தொடர்ந்து ஒத்திகை செய்துகொண்டே இருப்போம்" என்றார்.

விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது...
விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது...

எப்படிப் பயிற்சி எடுப்பீர்கள்?

Mannequin (மனித உருவ பொம்மை) வைத்துதான் பயிற்சி எடுப்போம்.

விண்வெளி சிகிச்சையில் ட்விஸ்ட் இருக்கிறது. ரத்த அழுத்தம் குறைந்தால், பூமியைப் போலவே, அங்கேயும் நரம்புகள் பாதிப்படையும்.

ஆனால், விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்களுக்கு எலும்பு மஜ்ஜைகள் மூலம் மருத்துகளை ஏற்றுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும்

விண்வெளி நிலையத்தின் கூரை மேல் CPR

"அங்கே ஒருவருடைய மார்பை அழுத்தி சிகிச்சை தருவது என்பது எளிதானது அல்ல. ஜீரோ புவியீர்ப்பில் இருவருமே மிதந்துகொண்டு இருப்பார்கள். அதனால், மார்ப்பைக் கீழே அழுத்த முடியாது. எனவே, தலைகீழாகப் புரட்டி, விண்வெளி நிலையத்தின் கூரையில் உங்களது கால்களை உறுதியாக ஊன்றி, சிகிச்சை தர வேண்டும்" என்றார்.

ஜீரோ புவியீர்ப்பில், கூரை மேல் நின்றுகொண்டு, தலைகீழாக ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதை யோசித்து பாருங்கள்.

விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது...
விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது...

விண்வெளி மருத்துவம் என்பது அறிவியல் மற்றும் களரி போன்ற கலைகளுக்குச் சமமானதாகும்.

சி.பி.ஆர் என்பது சுவர் புஷ்-அப்ஸ் போன்றதாகும். மருந்துகள் எலும்பு மஜ்ஜைகள் மூலம் உள்ளே செல்கின்றன. மேலும் ஒவ்வொரு பயிற்சிகளும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி ஆகும். விண்வெளி காட்டுத்தனமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் உடல்நல பிரச்னை ஏற்பட்டால் என்ன ஆகும்? | FAQ

  1. விண்வெளியில் உடல் நல பிரச்னை ஏற்பட்டால்  உடனடி உதவி கிடைக்குமா?
    இல்லை. விண்வெளியில் மருத்துவ அவசர நிலைகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. அங்கு இருப்பவர்களே மருத்துவ கடமைகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.

  2. விண்வெளி வீரர்கள் மருத்துவப் பயிற்சி பெறுகிறார்களா?
    ஆம். விண்வெளி வீரர்கள் மருத்துவ அவசர உதவி பற்றிய பயிற்சிகளை mannequinகளைப் பயன்படுத்தி பலமுறை செய்கிறார்கள்.

  3. Cardiac arrest ஏற்பட்டால் என்ன செய்கிறார்கள்?
    CPR செய்கிறார்கள்; Automated External Defibrillator (AED) மூலம் இதயத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயல்கிறார்கள்.

  4. சூழல் மாறுபாடு (microgravity) இந்தச் சிகிச்சைகளை எப்படிச் சிக்கலாக்குகிறது?
    மாறுபாடு காரணமாக மார்பை அழுத்தி சிகிச்சை அளிப்பது (chest compressions) சவாலாக இருக்கும்.

Doctor Vikatan: மன அழுத்தத்துக்கான சைக்யாட்ரிக் மருந்துக்கு மாற்றாகுமா ‘அமுக்கரா சூரணம்’?

Doctor Vikatan:அமுக்கரா சூரணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமா, இதை யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும்? மன அழுத்தத்துக்கான ஆங்கில சைக்யாட்ரிக் மருந்துகளுக்கு பதில் இதை எடுப்பது பாதுகாப்பானது என்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒரு பக்கம் கொசுத்தொல்லை; மறுபக்கம் வீஸிங் - கொசுவிரட்டிக்கு என்னதான் மாற்று?

Doctor Vikatan: நாங்கள் வசிக்கும் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இரவில்... இதற்காக மாலை 5 மணிக்கெல்லாம் கொசுவத்திச் சுருள் ஏற்றிவைக்கிறோம். அதைத் தாண்டி, இரவு படுக்கும்போது ... மேலும் பார்க்க

Doctornet: சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு; உதவிக்கரம் நீட்டும் 'டாக்டர் நெட்' இயக்கம்

சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு செப்டம்பர் 21 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாக்டர் நெட் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.டாக்டர்நெட் இந்தியா, தமிழ்நாட்டில் பொருளாதாரத்... மேலும் பார்க்க

``மது கெடுக்கும்; கீழாநெல்லி காக்கும்'' - இதன் A to Z பலன்கள் சொல்கிறார் சித்த மருத்துவர்!

''மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மஞ்சள் நிறக் கண்கள் நினைவுக்கு வரலாம்; மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம். ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால் சூடான எண்ணெய் விடுவது சரியா?!

Doctor Vikatan: தூங்கும்போது சில நேரங்களில் காதுக்குள் பூச்சி புகுந்துவிடுவது நடக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் காதுக்குள் சூடான எண்ணெய் விட்டால் பூச்சி வெளியே வந்துவிடும் என்கிறார்களே, அது சரியா... ... மேலும் பார்க்க

அழகு முதல் ஆரோக்கியம் வரை; சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காதீங்க!

வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பத... மேலும் பார்க்க