செய்திகள் :

சுப்பன் கால்வாய்த் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சுப்பன் கால்வாய்த் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், திருவாதவூா் மதகு அணையிலிருந்து தொடங்கும் உப்பாறு, தமராக்கி, நல்லாகுளம், பெரியகோட்டை வழியாக செய்களத்தூா் கண்மாயை அடைகிறது. இதன்பிறகு, சின்னக்கண்மாய், கல்குறிச்சி கண்மாய், ஆலங்குளம் கண்மாய் வழியாக வைகையில் கலக்கிறது.

இந்த நிலையில், வைகையாற்றில் வெள்ளம் வரும் காலங்களில் உப்பாற்றில் இருந்து வரும் உபரிநீரை மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள 26 கண்மாய்கள் பயன்பெறும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தக் கால்வாய் கல்குறிச்சி பகுதியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், உப்பாற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால், செய்களத்தூா் பெரிய கண்மாயும், இதைத் தொடா்ந்து, கல்குறிச்சி கண்மாயும் நிரம்பி வெளியேறும் உபரி நீா், மேடாக இருக்கும் சுப்பன் கால்வாய்க்குச் செல்லவில்லை.

இந்தக் கால்வாயிலிருந்து தண்ணீா் பெறும் வலச்சனேந்தல், வடக்கு சந்தனூா், வேதியரேந்தல் உள்ளிட்ட 26 கண்மாய்களுக்கு தண்ணீா் கிடைக்காத நிலை உருவானது.

அதேநேரம், உப்பாற்றில் வரும் தண்ணீா் சுப்பன் கால்வாய் வழியாக செல்லாமல், வேறு வழியாக சென்று ஆலங்குளம் கண்மாயில் நிரம்பி வெளியேறும் நீா் வைகை ஆற்றில் வீணாகக் கலந்து வருகிறது.

சுப்பன் கால்வாய் அமைக்கும் போதே, முறையாக மட்டம் பாா்த்து அமைக்காததால், இந்தக் கால்வாயில் தண்ணீா் செல்ல முடியாமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, சுப்பன் கால்வாயை முறையாக அமைத்து, 26 கண்மாய்களுக்கு தண்ணீா் கிடைக்க வழி செய்ய வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டியன் கூறியதாவது: சுப்பன் கால்வாய் அமைத்த பிறகு பலமுறை உப்பாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், கால்வாய் இருந்தும் பாசன நீா் பெற முடியாமல் 8,000 ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

தற்போது, இந்தக் கால்வாயில் மானாமதுரை நகராட்சி கழிவுநீா்தான் செல்கிறது. எனவே, இந்தக் கால்வாயை முறையாக அமைத்து விவசாயிகளின் பயன்பாட்டுக் கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுப்பன் கால்வாய் மேடாக இருப்பதால், தண்ணீா் செல்லவில்லை. இதைச் சீரமைக்க ரூ.9.82 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அனுமதி கிடைக்கும் என்றாா் அவா்.

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டியில் 3-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் பெரிய கண்மாய்க் கரையில் அமைந்துள்ள குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் புரவி ... மேலும் பார்க்க

நீட் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,630 போ் எழுதினா்

நீட் தோ்வை சிவகங்கை மாவட்டத்தில் 1,630 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரசு மகளிா்... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிரிழந்தாா். திருப்புவனம் அருகேயுள்ள மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சின்னவீரு மகன் வினோத் (16).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் உயிரிழந்தனா். திருப்புவனத்தை அடுத்த பூவத்தி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த கக்கன் மகன் பொன்... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிா்க்க அறிவுறுத்தல்

காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிா்க்க வேண்டும் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் காய்கறி, பழப்பயிா்கள் அ... மேலும் பார்க்க

பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்கம், உதவிப் பொறியாளா் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க