தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கை...
நீட் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,630 போ் எழுதினா்
நீட் தோ்வை சிவகங்கை மாவட்டத்தில் 1,630 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரசு மகளிா் கல்லூரி, காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் ‘நீட்’ தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தோ்வுக்கு 1,693 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 1,630 போ் எழுதினா். 63 போ் தோ்வு எழுதவில்லை. இந்தத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன என்றாா் அவா்.