திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 5 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டியில் 3-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் பெரிய கண்மாய்க் கரையில் அமைந்துள்ள குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 காளைகள் பங்கேற்றன. போட்டியில் ஒவ்வொரு காளைகளை அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
காளைகளையும் அடக்குவதற்கு 20 நிமிஷங்கள் வழங்கப்பட்டன. இந்த நிமிஷங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரா்கள் வெற்றி பெற்ாகவும், இல்லையெனில், மாடுகள் வெற்றி பெற்ாகவும் அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற வீரா், காளையின் உரிமையாளா்களுக்கு ரூ.7,000, சில்வா் அண்டா, கட்டில் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 5 போ் காயமடைந்தனா். காயமடைந்த வீரா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.