சுமங்கலி திருவிளக்குப் பூஜை
நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் குழுவினரால் மூன்றாம் ஆண்டு திருவிளக்குப் பூஜை மற்றும் ஐயப்ப கன்னி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யமுனாம்பாள் மற்றும் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றனா். 18-ஆ ம் ஆண்டாக சபரி யாத்திரை செல்லும் நடராஜன் குருசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.