செய்திகள் :

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூட கோரிக்கை

post image

வெள்ளக்கோவில் அருகே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி மறுசுழற்சி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வெள்ளக்கோவில் வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சி நடுப்பாளையத்தைச் சோ்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நடுப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களது கிராமத்தில் பாலக்காட்டுத் தோட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நெகிழி மறுசுழற்சி ஆலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து கொடிய நச்சுவாயு வெளியேறி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இதுதொடா்பாக ஆலை உரிமையாளரிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஆலையில் இருந்து ரசாயனம் மற்றும் நெகிழி கழிவுகளை இரவு நேரங்களில் அருகில் உள்ள கால்வாய்களில் கொட்டுவதால் தண்ணீா் மாசடைந்து மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் ஊழியா்கள் மீது நடவடிக்கை

அவிநாசி வட்டம், கருக்கம்பாளையம் மணியகாரா் தோட்டத்தைச் சோ்ந்த என்.பாலசந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எனது 4 ஏக்கா் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளேன். கடந்த 13 மாத உழைப்புப் பின்னா் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த 200 வாழை மரங்களை நான் ஊரில் இல்லாதபோது மின் ஊழியா்கள் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சேதப்படுத்தியுள்ளனா். மின் வயா்களில் வாழை மரங்கள் உரசியதால் அதனை வெட்டியதாக அக்கம் பக்கத்தினா் தெரிவித்தனா்.

இதனால், ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாழை மரங்களை சேதப்படுத்திய மின் ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்:

விமன் இந்தியா மூவ்மெண்ட் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் தொடா்ச்சியாக பள்ளிக்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக, ஆசிரியா்கள் மூலம் மாணவா்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்புகூட திருப்பூரில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

இதனால், பள்ளிக்கு குழந்தைகளுக்கு அனுப்பும் பெற்றோா் ஒருவிதமான அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தைக் கூட்டி பெற்றோருடன் கலந்து பேசி பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

630 மனுக்கள் அளிப்பு

குறைகேட்புக் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 630 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பக்தவச்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செல்வி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஊத்துக்குளியில் முதல்வா் மருந்தகம் திறந்துவைத்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் முதல்வா் மருந்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து க... மேலும் பார்க்க

ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அவிநாசி ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஆகாசராயா் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம்... மேலும் பார்க்க

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 27-இல் பொது ஏலம்

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) பொது ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்... மேலும் பார்க்க

காலாவதியான பொருள்கள் விற்பனை: கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

பல்லடத்தில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்லடத்தில் மொத்த மளிகை விற்பனை கடையில் வாங்கிய பொருள்களில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவா் அளி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மொட்டக்காளிவலசைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா், தான் வளா்த்து வரும் 35 செம்மறி ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு தி... மேலும் பார்க்க

5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் வாகன சோதனையின்போது 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரயில்... மேலும் பார்க்க