செய்திகள் :

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

post image

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதோடு சுஷாந்த் சிங்கை மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டதாகவும் ரியா சக்ரவர்த்தி மீது குற்றம் சாட்டினர்.

இது குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்த் சிங்கின் பெற்றோர் கேட்டுக்கொண்டதால் இவ்வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கு விசாரணை இப்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது சிபிஐ தனது இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதாவது விசாரணையை முடித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், ``சுஷாந்த் சிங்கை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை'' சுஷாந்த் சிங் வீட்டில் இருந்து ஜூன் 8ம் தேதியே ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரனும், காலி செய்துவிட்டனர். சுஷாந்த் சிங் தற்கொலை செய்த ஜூன் 14ம் தேதி வரை அவர்கள் அந்த வீட்டிற்கு வரவேயில்லை. ஜூன் 10ம் தேதி சுஷாந்த் சிங் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் சோவிக்கிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசி இருக்கிறார். ஆனால் ரியா சக்ரவர்த்தி பேசவில்லை''

ரியாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ சுஷாந்த் சிங்கை சந்தித்து பேசியதற்கான எந்த வித ஆதாரமும் சிக்கவில்லை. ஜூன் 8 முதல் 12ம் தேதி வரை சுஷாந்த் சிங்குடன் அவரது சகோதரி தான் தங்கி இருந்துள்ளார். எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்த வித ஆதாரமும் சிக்கவில்லை.

அதோடு குற்றம் சாட்டப்பட்ட யாரும் சுஷாந்த் சிங்கை அடைத்து வைத்திருக்கவோ அல்லது வெளியில் செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்ததற்கோ எந்த வித ஆதாரமும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரியா சக்ரவர்த்தியும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்த் சிங்கின் சொத்தை பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்ய தூண்டியதாக சுஷாந்த் சிங் தந்தை குற்றம் சாட்டி இருந்தார்.

இது குறித்து சி.பி.ஐ தனது அறிக்கையில்,'' ரியா சக்ரவர்த்தியும், அவரது சகோதரரும் ஜூன் 8ம் தேதி சுஷாந்த் சிங் வீட்டை காலி செய்தபோது சுஷாந்த் சிங் பரிசாக கொடுத்த ஆப்பிள் லேப்டாப் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்றவற்றை மட்டும் தங்களுடன் எடுத்துச்சென்றுள்ளனர். சுஷாந்த் சிங்கிற்கு தெரியாமல் ரியா சக்ரவர்த்தியோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்த வித சொத்துக்களையும் எடுத்துக்கொண்டதற்கான எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் மருத்துவ குறிப்புகளை வெளிப்படையாக தெரிவிப்பேன் என்று அவரிடம் ரியா சக்ரவர்த்தி ஒரு முறை மிரட்டியிருக்கிறார். அதனை சுஷாந்த் சிங் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் மரணத்தில் ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை - சிபிஐ அறிக்கை
சுஷாந்த் சிங்குடன் ரியா சக்கரவர்த்தி

இது குறித்து சுஷாந்த் சிங் பெற்றோர் சார்பாக கோர்ட்டில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் வருண் சிங் கூறுகையில்,'' சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படவில்லை என்று மட்டும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இதற்கு வங்கி ஸ்டேட்மெண்ட் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இது வெறும் கண்துடைப்பு மட்டுமே. சிபிஐ உண்மையிலேயே உண்மையை வெளிக்கொணர விரும்பினால், இறுதி (மூடல்) அறிக்கையுடன் சாட்டிங் விபரங்கள், தொழில்நுட்ப பதிவுகள், சாட்சிகளின் அறிக்கைகள், மருத்துவ பதிவுகள் போன்ற அனைத்து வழக்கு ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மோசமான இந்த விசாரணை அறிக்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு மனு தாக்கல் செய்வோம்" என்று சிங் கூறினார்.

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்ட... மேலும் பார்க்க

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.Australia Women's Teamகடந்த செப்டம்பர் 30 ஆம் ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

``வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம்'' - கையும் களவுமாக சிக்கிய நாகர்கோவில் இன்ஸ்பெக்டர்

நேசமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சந்தை ரா... மேலும் பார்க்க

கோவை: அதிவேகமாக மரத்தில் மோதிய கார் - 4 இளைஞர்களை காவு வாங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (20). இவர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி அய்யப்பன் (21), தஞ்சாவூர் ம... மேலும் பார்க்க