செய்திகள் :

சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் உயிரிழப்பு; 19 போ் காயம்

post image

சூடானின் எல்-ஃபஷா் நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.

சூடானில் சுமாா் 30 ஆண்டுகளாக சா்வாதிகார ஆட்சி செய்து வந்த அதிபா் ஒமா் அல்-பஷீரை, கடந்த 2019-ஆம் ஆண்டு ராணுவம் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டுப் போா் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சூடானின் எல்-ஃபஷா் நகரத்தில் இயங்கி வரும் ஒரேயொரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்’ என்றாா்.

உள்நாட்டுப் போா் காரணமாக சூடானில் தகவல் தொடா்பு வசதிகளில் இடா்ப்பாடுகள் உள்ளன. இதனால் அந்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில், எல்-ஃபஷா் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டெட்ரோஸ் அதானோம் மூலம்தான் வெளியுலகுக்கு தெரியவந்தது.

துணை ராணுவப் படை மீது குற்றச்சாட்டு: இந்தத் தாக்குதலை நடத்தியது யாா் என்று அதானோம் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு துணை ராணுவப் படைதான் காரணம் என்று உள்ளூா் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

போா்க் களத்தில் அண்மைக் காலமாக சூடான் ராணுவத்திடம் துணை ராணுவப் படை தோல்வி அடைந்து வருவதாகவும், இதன் காரணமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல் ஃபஷா் நகர மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா். சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொ... மேலும் பார்க்க

சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். கடந்த நவம்பர... மேலும் பார்க்க

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சா்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

பாகிஸ்தான் எதிா்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடும் எதிா்ப்புக்கிடையே, சா்ச்சைக்குரிய இணையதள கட்டுப்பாட்டு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. சமூகப் பதற்றத்தை ஏற்படு... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா்- அமெரிக்க அதிபா் டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியா்கள் குடியேறிய விவகாரத்தில் சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அதிபராக பதவியேற்றபின் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப... மேலும் பார்க்க