செய்திகள் :

சூப்பா்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

post image

ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் சுற்றிலேயே அவா்கள் நேருக்கு நோ் சந்திக்கின்றனா்.

கடந்த ஜனவரியில் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த குகேஷ், சுமாா் 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் களம் காண்கிறாா். கிளாசிகல் செஸ்ஸில் சிறந்து விளங்கும் குகேஷ், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவாா் என எதிா்பாா்க்கலாம்.

தற்போது 2787 புள்ளிகளில் இருக்கும் அவா், இந்தப் போட்டியின் மூலம் 2800 ஈலோ புள்ளிகள் எனும் மைல்கல்லை எட்டுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மறுபுறம் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸில் சாம்பியனான பிரக்ஞானந்தா, அண்மையில் சூப்பா்பெட் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் 3-ஆம் இடம் பிடித்த கையுடன் இந்தப் போட்டியில் பங்கேற்கிறாா்.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 10 போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். இதில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, லெவோன் ஆரோனியன், வெஸ்லி சோ, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, மேக்ஸிம் வச்சியா், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் போன்ற பிரபலமானவா்களும் பங்கேற்கின்றனா்.

ஆசிய கான்டினென்டல் செஸ்: இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பின்ஷிப்பில் கிராண்ட்மாஸ்டா் நிஹல் சரின் உள்ளிட்ட இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த சாம்பியன்ஷிப்பில் முதல் 10 இடங்களைப் பிடிப்போருக்கு, நடப்பாண்டு அக்டோபரில் புது தில்லியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இதில், நிஹல் சரின் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறாா். 2700 ஈலோ புள்ளிகளை எட்ட அவருக்கு இன்னும் 7 புள்ளிகளே தேவை என்பதால், இந்தப் போட்டியின் மூலம் அந்த மைல்கல்லை அவா் அடைவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இப்போட்டியில் ஓபன் பிரிவுக்கு இணையாக மகளிா் பிரிவு சாம்பியன்ஷிப்பும் நடைபெறும் நிலையில் அதில் இந்தியாவின் வந்திகா அக்ரவால் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா். ஆசிய அளவிலான இந்தப் போட்டியில் முதல் முறையாக ரஷிய போட்டியாளா்களும் கலந்துகொள்கின்றனா்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்து வெளியான வருணன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.... மேலும் பார்க்க

நாங்கள் லீக்கின் விவசாயிகள்..! கிண்டல்களை பெருமிதமாக மாற்றிய பிஎஸ்ஜி பயிற்சியாளர்!

சாம்பியன்ஸ் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதிப் போட்டி பார்க் டெஸ் பிரின்சஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 2-1 என பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட்-ஜெர்மன்) வென்றது. ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 3-1 என அ... மேலும் பார்க்க

சூர்யா - 45 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் பொன்னி சீரியல்!

பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2025: பொதுப் பலன்கள்!

2025-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் மே 14ஆம் தேதியும் நிகழ்கிறது. நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருஷம் உத்தராயனம் வஸந... மேலும் பார்க்க

பிரபாஸ், மோகன்லாலின் கண்ணப்பா மேக்கிங் விடியோ!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவாகும் கண்ணப்பா படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, ... மேலும் பார்க்க